உத்திரமேரூர் அருகே தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்து விழுந்து பொருட்கள் சேதம்

உத்திரமேரூர் அருகே தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்து விழுந்து பொருட்கள் சேதம் அடைந்தது.
உத்திரமேரூர் அருகே தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்து விழுந்து பொருட்கள் சேதம்
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த குப்பைநல்லூர் கிராமம் மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அருண், தருண் என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தமிழக அரசு சார்பில் 32 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தொகுப்பு வீடு மற்றும் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இந்த மழையின் காரணமாக ஆனந்தனின் வீடு மேலும் சேதமடைந்தது. நேற்று ஆனந்தனும் அவரது மனைவி சத்யாவும் வேலைக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மதியம் திடீரென வீட்டின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி, கியாஸ் அடுப்பு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தது. தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com