வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
Published on

காரியாபட்டி, 

காரியாபட்டி பேரூராட்சி கே.செவல்பட்டி காலனியில் உள்ள பொதுமக்களுக்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு 34 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித மராமத்து பணிகளும் செய்யப்படாமல் உள்ளது. ஆதலால் தொகுப்பு வீடுகளில் உள்ள மேற்கூரை பழுதடைந்து அவ்வப்போது இடிந்து விழுந்து விடுகிறது. இந்தநிலையில் நேற்று ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மின்விசிறி மற்றும் பாத்திரங்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com