

நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழையின்போது நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் சின்னதெருவில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவரின் மகன் வடிவேல் (40) என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வடிவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், வேட்டாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் நிரோஷா ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மீட்டு மாற்று இடத்தில் தங்க ஏற்பாடு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மழை பாதிப்பு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.