விவசாயிகளுக்கு இடையூறாக உள்ள கட்டிட இடிபாடுகளை உடனே அகற்ற வேண்டும்

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு இடையூறாக உள்ள கட்டிட இடிபாடுகளை உடனே அகற்ற வேண்டும் விழுப்புரம் கலெக்டருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை
விவசாயிகளுக்கு இடையூறாக உள்ள கட்டிட இடிபாடுகளை உடனே அகற்ற வேண்டும்
Published on

திருக்கோவிலூர்

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு தலைவரும், அரகண்டநல்லூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி முதல் அதிகபட்சம் ரூ.2 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் இங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வசதிக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேலும் கட்டமைக்க வேண்டும். மின் விளக்கு, கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை சரி செய்ய வேண்டும். குறிப்பாக விற்பனைகூட வளாகத்தின் உள்ளே இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள் அப்படியே கிடக்கின்றன. இதனால் அருகே உள்ள கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதோடு, அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே ஒப்பந்தம் எடுத்த கட்டிட கான்டிராக்டர் அல்லது உரிய துறை அதிகாரிகள் மூலம் கட்டிட இடிபாடுகளை உடனே அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com