‘ஆளுங்கட்சிக்கு மிகுந்த தன்னடக்கம் தேவை' - கி.வீரமணி

தி.மு.க. ஒருபோதும் பலவீனம் அடையாது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
‘ஆளுங்கட்சிக்கு மிகுந்த தன்னடக்கம் தேவை' - கி.வீரமணி
Published on

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தி.மு.க. கூட்டணியில் இருந்து அதன் மதச்சார்பின்மை பட்டுப்போகக் கூடாது, பா.ஜ.க.க்கு வழிவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு பதவியேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி என்ற நிலைப்பாடு எடுத்துள்ள தி.மு.க.வின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு ஜனநாயகத்தின் முட்டுச் சந்தில் சிக்கி கொள்ளாமல் ஆளுங்கட்சிக்கு மிகுந்த தன்னடக்கம் தேவை. தி.மு.க. ஒருபோதும் பலவீனம் அடையாது. அரசியல் காற்று ஒரே திசையில் என்றும் அடிப்பதில்லை என்பதை அனுபவத்தால் பழுத்தவர்களுக்கு என்றும் புரியும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com