

சென்னை,
மருதுபாண்டியர்களின் தியாகமும் வீரமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய விடுதலைப்போரில் ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்க மாபெரும் போர் புரிந்த வீர மருதிருவர் நினைவு நாள் இன்று. மக்களிடம் இருந்து உருவான மன்னர்கள் என்று போற்றப்பட்ட மருதுபாண்டியர்கள், அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து உருவாக்கிய சமத்துவப் போர்ப்படை, ஆங்கிலேயர்களை அலறச்செய்தது.
சிவகங்கைச் சீமையில் இருந்து புறப்பட்டு, இந்திய விடுதலைக்காக களம் கண்ட தென்னிந்திய மன்னர்களை ஒருங்கிணைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள்.
‘ஜம்புத்தீவு’ பிரகடனத்தை வெளியிட்டு நாடெங்கும் விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகமும் - வீரமும் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க அவர்கள் புகழ்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.