உழைக்கும் மகளிருக்கு வாகன மானியம் வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும்

உழைக்கும் மகளிருக்கு வாகன மானியம் வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும் தமிழக அரசுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்.
உழைக்கும் மகளிருக்கு வாகன மானியம் வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும்
Published on

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபைக்கு வெளியே நிருபர்களுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அளித்த பேட்டி வருமாறு:-

பெண்கள் செல்லும் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, உழைக்கும் மகளிருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாரையும் சார்ந்திராமல், சுயமாக முடிவெடுத்து, அவர்களின் பணிகளை அவர்களே செய்வதுதான் பெண் சுதந்திரமாகும். யாருடைய தயவும் இல்லாமல் இருப்பதுதான் அதற்கு அடிப்படையாகும். அதன்படி, பெண்களே சொந்தமாக வாகனங்களை இயக்கிச் செல்கின்றனர். பெண்களுக்கான வாகனங்கள் என்பது அவர்களின் இறக்கைகளாக உள்ளன. ஆனால் பெண்கள் இயக்கும் வாகனங்களுக்கான மானியத்தை அரசு நிறுத்தினால் இது வாகனத்திற்கான மானிய நிறுத்தமாக மட்டும் இருக்காது, எனவே இந்தத் திட்டத்தை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கோருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com