பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு நடந்துள்ளது.
பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
Published on

குளித்தலை,

பள்ளி ஆசிரியை வீடு

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி சந்திரபிரபா (வயது 40). இவர் குளித்தலை அருகே உள்ள வை.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் விடுமுறைக்காக திருநெல்வேலியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சந்திரபிரபா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதன்பின்னர் திருநெல்வேலியில் இருந்து கடந்த 4-ந்தேதி தனது வீட்டிற்கு சந்திரபிரபா வந்துள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நகைகள் திருட்டு

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்தநிலையில் கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 2 பவுன் தங்கசங்கிலி, 4 கிராம் தங்கத்தோடு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.பின்னர் திருட்டு சம்பவம் குறித்து சந்திரபாபு குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com