சிறுமி மீது ஸ்கூட்டர் மோதியது

கிணத்துக்கடவு அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுமி மீது ஸ்கூட்டர் மோதியது.
சிறுமி மீது ஸ்கூட்டர் மோதியது
Published on

கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் திருத்திகாயாஷினி(வயது 12). இவள் சம்பவத்தன்று கிணத்துக்கடவு-வீரப்ப கவுண்டனூர் சாலையோம் குப்பையை கொட்டிவிட்டு வீடு திரும்பினாள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திருத்திகாயாஷினி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவள், பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிணத்துக்கடவு போலீசார், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி வந்த அரசம்பாளையத்தை சேர்ந்த அஸ்வின் மகேஷ்(20) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com