விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த காவலாளி சாவு

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த காவலாளி சாவு
விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த காவலாளி சாவு
Published on

நெகமம்

செஞ்சேரிமலையை அடுத்த சலவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 70). இவர் நெகமம் அருகில் உள்ள காட்டம்பட்டியில் தனியார் கம்பனியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி வழக்கம்போல பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் காட்டம்பட்டி அருகே வந்தபோது இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியது. இதில் சோமசுந்தரம் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com