நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

ஒடுகத்தூர் அருகே நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்பட்டார்.
நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டவர் கைது
Published on

ஒடுகத்தூரை அடுத்த பீஞ்ச மந்தை சின்ன எட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் மணி (வயது 23). இவருக்கும் ஜமுனாமரத்தூர் கீழ் குச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் சின்ன பையன் என்பவருக்கும் நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரம் அடைந்த சின்ன பையன் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மணியை சுட்டுள்ளார். இதில் காயம் அடைந்த மணியை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன பையனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com