பாம்பு கடித்து சிறுவன் பலி

தோட்டத்தில் விளையாடிய போது பாம்பு கடித்து சிறுவன் பலியானான்.
பாம்பு கடித்து சிறுவன் பலி
Published on

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த சேத்துமடை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஹரினேஷ் (வயது 4). இந்தநிலையில் நேற்று ஹரினேஷ் வீட்டு முன்பு உள்ள தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவனை பாம்பு ஒன்று கடித்தது. இதனால் ஹரினேஷ் மயங்கி விழுந்தான். இதை பார்த்த கணேசன் உடனடியாக சிறுவனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு ஹரினேசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com