வீட்டுக்குள் நுழைந்த பாம்பு பிடிபட்டது

திருவாடானை அருகே வீட்டுக்குள் நுழைந்த பாம்பு பிடிபட்டது.
வீட்டுக்குள் நுழைந்த பாம்பு பிடிபட்டது
Published on

தொண்டி, 

திருவாடானை தீயணைப்பு நிலைய எல்கைக்கு உட்பட்ட முப்பையூர் கிராமத்தில் பாண்டியராஜன் என்பவரது வீட்டில் குஞ்சு பொரிப்பதற்காக கோழியை அடை வைத்துள்ளனர். அதில் உள்ளே நுழைந்த நல்ல பாம்பு ஒன்று கோழியை கொத்தியதில் கோழி உயிரிழந்தது.

மேலும் குஞ்சு பொரிக்க வைக்கப்பட்டிருந்த நான்கு முட்டைகளை நல்ல பாம்பு முழுங்கி விட்டது. இதனைப் பார்த்த வீட்டுக்காரர்கள் உடனடியாக திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்..

நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com