கோவிலுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் கோவிலுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
கோவிலுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
Published on

சோழவந்தான், 

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் சடையாண்டிசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்புறம் விவேகானந்தர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிலுக்குள் நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சோழவந்தான் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ரூபன், போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து மற்றும் தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி அங்கிருந்த நல்ல பாம்பை பிடித்தனர்.பிடித்த நல்ல பாம்பை மலை பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com