தங்கம் வென்ற மாணவியின் சான்றிதழ் கிடைக்க சபாநாயகர் ஏற்பாடு

தங்கம் வென்ற மாணவியின் சான்றிதழ் கிடைக்க சபாநாயகர் அப்பாவு ஏற்பாடு செய்தார்.
தங்கம் வென்ற மாணவியின் சான்றிதழ் கிடைக்க சபாநாயகர் ஏற்பாடு
Published on

பணகுடி:

பணகுடியை சேர்ந்த குமரேசன், வளர்மதி தம்பதியின் மகள் வர்ஷா (வயது 21) சென்னை எம்.ஓ.வி. கல்லூரியில் இதழியல் படித்து கொண்டு இருக்கிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு இந்திய அளவில் நடந்த உயரம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளார். இது தொடர்பான சான்றிதழ் இவருக்கு கிடைக்காமல் இருந்துள்ளது. பின்னர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து சான்றிதழ் குறித்து கோரிக்கை வைத்த நிலையில் அதற்குரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு வர்ஷாவின் சான்றிதழ் கிடைக்க சபாநாயகர் அப்பாவு எற்பாடு செய்தார்.

மாணவி தனது குடும்பத்தினருடன் வந்து சபாநாயகரை சந்தித்து சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும் ஆசிய அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வசதிகளை ஏற்படுத்திடவும் முதல் அமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்கவும் மாணவியின் அடுத்த கட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உதவிகளை செய்வதாகவும் சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com