சிறப்பு ரயிலை பாசஞ்சர் ரயிலாக இயக்க வேண்டும்

சிறப்பு ரயிலை பாசஞ்சர் ரயிலாக இயக்க வேண்டும்
சிறப்பு ரயிலை பாசஞ்சர் ரயிலாக இயக்க வேண்டும்
Published on

மன்னார்குடி:

மன்னார்குடியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயிலை பாசஞ்சர் ரெயிலாக இயக்க வேண்டும் என ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறப்பு ரெயில் இயக்கப்படும்

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை சென்ற பாசஞ்சர் ரயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது வருகிற 31-ந்தேதி முதல் மன்னார்குடியில் இருந்து திருச்சி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6.30 மணிக்கு மன்னார்குடியில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு காலை 7.10-க்கு திருச்சிக்கு சென்றடையும் என்றும், மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து காலை 5.45-க்கு புறப்பட்டு காலை 7.55-க்கு மன்னார்குடிக்கு வந்துசேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாசஞ்சர் ரெயிலாக இயக்க வேண்டும்

இதுகுறித்து மன்னார்குடி ரயில்வே உபயோகிப்பாளர் சங்க பொருளாளர் பழனியப்பன் கூறுகையில்,

ஏற்கனவே மானாமதுரை வரை இயங்கி வந்த ரயில் பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்அடைந்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திருச்சி வரை ரயில் போக்குவரத்து தொடங்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்றாலும், சிறப்பு ரயிலாக இந்த ரயில் இயக்கப்படுவதால் கட்டணம் கூடுதலாக இருக்கும் என்பதால் பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்து மன்னார்குடியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயிலை பாசஞ்சர் ரெயிலாக இயக்க வேண்டும் என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com