திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டுபோட்டி நடைபெற்றது/
திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு
Published on

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டியில் மார்கழி நான்காவது வெள்ளியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கிராம நாட்டார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கருப்பர் கோவிலில் ஒன்று கூடி சாமி தரிசனம் செய்தனர். மஞ்சுவிரட்டு பொட்டலில் அமைந்துள்ள முனியன் கோவிலுக்கு வேட்டி, துண்டுகளுடன் ஊர்வலமாக சென்று மாடுகளுக்கு மரியாதை செய்தனர். பின்னர் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு கொண்ட இந்த மஞ்சுவிரட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை பிடித்து மகிழ்ந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசாக மாட்டின் உரிமையாளர்களுக்கு கிடேரிகன்றுகள், கட்டில், பீரோ, மின்விசிறி, கூடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com