மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: இளைஞர் மரண வழக்கில் நீதிபதிகள் காட்டம்

முதல் தகவல் அறிக்கை இல்லாமல் வழக்கை எப்படி சிறப்பு படை கையில் எடுத்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: இளைஞர் மரண வழக்கில் நீதிபதிகள் காட்டம்
Published on

மதுரை,

மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக  ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது, அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், " இளைஞர் உடலில் 44 காயங்கள் உள்ளன. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது. இளைஞரின் உடலில் எந்த உறுப்பையும் விட்டு வைக்கவில்லை. அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது

பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்அஜித்குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை" என்று காட்டமாக கேள்வி எழுப்பினர். அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.  சற்று நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com