கீற்றுக்கொட்டகை தீப்பற்றி எரிந்தது

கீற்றுக்கொட்டகை தீப்பற்றி எரிந்தது.
கீற்றுக்கொட்டகை தீப்பற்றி எரிந்தது
Published on

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் உள்ளே வரும் நுழைவு பகுதி அருகே மாவட்ட தலைமை சுற்றுலா வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்துக்கு கீற்றுக்கொட்டகையிலான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேற்கூரை நேற்று காலை திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அலுவலகத்தில் உள்ளே இருந்த வேன் டிரைவர்கள், உரிமையாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்ததால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் உடனடியாக இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தொவித்தனர். அதன்பேரில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கீற்று கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த தீ விபத்து சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com