மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

காட்டுமன்னார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
Published on

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே கருணாகரநல்லூர், கந்தகுமாரன் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலை புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாகிர் உசேன், நகர அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தலைமை இடத்து துணைதாசில்தார் பிரகாசை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com