கண்மாயில் மூழ்கி மாணவன் பலி

திருச்சுழி அருகே கண்மாயில் மூழ்கி மாணவன் பலியானான்.
கண்மாயில் மூழ்கி மாணவன் பலி
Published on

திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் ஜோஸ்வா சந்தோஷ் (வயது 14). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கல்குளம் கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜீக்கு தகவல் அளித்தனர். உடனே அவர் கண்மாய் பகுதிக்கு விரைந்து வந்து ஜோஸ்வா சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்மாயில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com