மாணவி திடீர் மாயம்

பகண்டை கூட்டுரோட்டில் மாணவி திடீர் மாயம்
மாணவி திடீர் மாயம்
Published on

ரிஷிவந்தியம்

பகண்டைகூட்டுரோட்டை சேர்ந்தவர் தோமாஸ் மகள் அனுநிரோஷா(வயது 17) தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த இவர் அரசு பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது பெரியப்பா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அனுநிரோஷா நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணாததால் இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com