கால்வாயில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

கல்பாக்கம் அருகே கால்வாயில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கால்வாயில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
Published on

செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிபவர் ஆனந்தராஜ்.இவரது மகன் அர்ஷத் (வயது 12). அங்குள்ள அணுசக்தி துறை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் அணுமின் நிலையத்தின் குடியிருப்பு அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.உடன் குளித்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தும் முடியாத காரணத்தால் உடனே அருகிலிருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இறங்கி அர்ஷத்தை தேடினர். அப்போது அவர் கால்வாயில் கரையோர புதரில் சிக்கி உயிரிழந்ததை கண்டுபிடித்தனர்.

அங்கு வந்த கல்பாக்கம் போலீசார் அர்ஷத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com