அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியல்

வாலாஜா அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியல்
Published on

வாலாஜா அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பஸ்சை நிறுத்துவதில்லை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பணிமனையில் இருந்து தடம் எண் 7டி அரசு பஸ் தினமும் ஆற்காட்டில் இருந்து வாலாஜாபேட்டை அருகே உள்ள நாராயணகுப்பம் வரை இயங்கி வந்தது. இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி சோளிங்கா சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் நாராயணகுப்பம் வரை சென்று வந்த தடம் எண் 7டி பஸ்சை பாணாவரம் வரை நீட்டித்து கொடியசைத்து தொடங்கிவைத்தார். பஸ்சில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் நாராயணகுப்பம், வாங்கூ உள்ளிட்ட பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவாகள் படியில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.இதனால் மேலும் பயணிகளை ஏற்றமுடியாத சூழ்நிலையில் ஒழுகூ பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் சுமா 5 கிலோமீட்டா தூரம் நடந்து செல்வதாக கூறுகின்றனர்.

சாலை மறியல்

ஏற்கனவே இயங்கி வந்தது போல் நாராயணகுப்பம் வரை பஸ்சை இயக்க வேண்டும் என கூறி நேற்று காலை நாராயணகுப்பம் வந்த 7டி அரசு பஸ்சை அப்பகுதியை சோந்த பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்கரவாத்தி மற்றும் போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com