சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1ந்தேதி முதல் ஜூன் 2ந்தேதி வரை கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1ந்தேதி முதல் ஜூன் 2ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1ந்தேதி முதல் ஜூன் 2ந்தேதி வரை கோடை விடுமுறை
Published on

சென்னை,

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகிற மே 1ந்தேதி முதல் ஜூன் 2ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம். வழக்குகள் மீது புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை நடத்தப்படும்.

விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 நீதிபதிகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 12 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com