சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு
Published on

மணமேல்குடி அருகே காரக்கோட்டையை சேர்ந்த சுலோச்சனா (வயது 60) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சோமநாதன் பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் (30), ரமேஷ் (51) ஆகியோரை மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். மேலும் பாராட்டு நற்பணி சான்றிதழ்களை வழங்கினார். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com