2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது.
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
Published on

சென்னை,

தமிழக பட்ஜெட் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 14ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை ஆகிய 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வந்ததால், 2 நாட்கள் சட்டசபைக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com