முதல்-அமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை ஜனவரி 4-ந்தேதி கூடுகிறது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி மாதம் 4-ந்தேதி நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை ஜனவரி 4-ந்தேதி கூடுகிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பலமுறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை கூட்டம்

இந்தநிலையில் அமைச்சரவை கூட்டம் வரும் ஜனவரி மாதம் 4-ந்தேதி காலை 11 மணிக்கு தலைமைச்செயலகத்தில் கூட்டப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டப்படும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி வரும் ஜனவரி மாதம் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். கவர்னர் ஆற்றும் உரையில் இடம் பெறும் கருத்துகள், திட்டங்கள் தொடர்பான அங்கீகாரத்தை, ஜனவரி 4-ந்தேதி கூடும் அமைச்சரவை வழங்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com