மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
Published on

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

நாளை காலையில் சட்டசபையில் சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. சட்டமன்ற அலுவலர்கள் நாளை பிற்பகலில் நிறைவடைந்துவிடும். அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com