ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு

ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்குமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு
Published on

சென்னை,

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை பாக்கெட்டில் வழங்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதனால், எடை குறைவு பிரச்னை தடுக்கப்படுவதுடன், தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில்

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, லிட்டர் பாமாயில் ஆகியவை மானிய விலையிலும் விற்கப்படுகின்றன. இதில், பாமாயில் மட்டும் பாக்கெட்டில் வழங்கப்படுகிறது.

அரசு முடிவு

மற்ற பொருட்களை வாங்க, கார்டுதாரர்கள் பை எடுத்துச் செல்ல வேண்டும். சில ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை எடை போட்டு வழங்குவதில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுகின்றன. இதனால், கார்டுதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்குமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே துவரம் பருப்பு, சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com