

கொரோனா தடுப்பு முக்கியம், முன்னுரிமை பெற வேண்டியது என்பதால் முழு ஊரடங்கை நீட்டிப்பது அவசர, அவசியமாகும். அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க அரசு எந்திரத்தை குறிப்பாக காவல்துறை மற்றும் மக்கள் நல களப்பணியாளர்கள் வேகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு எடுக்கும் சரியான நடவடிக்கைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு.நமது முதல்-அமைச்சர் திருச்சியில் கூறியதுபோல, கொரோனா ஒழிந்த நாளே மகிழ்ச்சிக்குரிய நாள். அரசுக்கும் முதல்-அமைச்சருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் என்பதை மனதிற்கொண்டு தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தர அனைவரும் முன்வர வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள், கலைத்துறை அன்பர்கள், பொது நல, சமூகநலப் பணியாளர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து, இப்பெரும் போரில் வெற்றி பெற ஓர் அணியில் நின்று, அரசின் முயற்சிகள் வெல்லும்படி பாடுபடுவோம் வாரீர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.