மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி

திருப்புவனம் மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி
Published on

திருப்புவனம்

திருப்புவனம் அருகே மடப்புரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும், மற்ற நாட்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதேபோல் தமிழ், ஆங்கில புத்தாண்டு வருடப்பிறப்புகள், மாதந்தோறும் வரும் பவுர்ணமி, ஆடி மாதம் மற்றும் முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவது வழக்கம்.

பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. மடப்புரம் கோவில் தக்கார் சிவராம்குமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையர்கள் வில்வமூர்த்தி, செல்வராஜ் முன்னிலை வகித்தனர். உண்டியலில் காணிக்கையாக ரூ.58 லட்சத்து 49ஆயிரத்து 256 மற்றும் தங்கம் 616.5 கிராம், வெள்ளி 1618 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் வசந்தாள், கோவில் பணியாளர்கள், ஐயப்பா சேவா சங்கத்தினர் மற்றும் பலர் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com