டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்

திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்
Published on

திருவிடைமருதூர்:

பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம்

கும்பகோணம் அருகே திருபுவனம் பேரூராட்சி பா.ம..க கட்சியின் அவசர செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் தலைவர் கருணாஜோதி தலைமை தாங்கினார். கோ.சரவணன், வி.சேட்டு, கோவி.ராஜவேல், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.

கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவருமான ம.க. ஸ்டாலின், மாவட்ட தலைவர் வக்கீல் எஸ்.வீ.சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் கோ.ரவிச்சந்திரன், மாவட்ட ஆலோசகர் எஸ். கே.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் டி.கே. ரவிராஜ், எம்.ஏ.குமார், பாலூர் துரைராஜ், வக்கீல் ராம. விஜய பாண்டியன், டி.என்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்

கும்பகோணம் மயிலாடுதுறை மெயின் சாலையில் திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் தினமும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.மேலும் இந்த கடையை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிக மக்கள் தொகை உள்ள திருபுவனம் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

மழைக்கால உதவித்தொகை

திருபுவனத்தில் அரசு நூலகம் அமைக்க உரிய இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மழைக்கால உதவித்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் பிராணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com