ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

கடையநல்லூர் அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருடைய மனைவி குணப்பிரியா (வயது 30). தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் சென்று விட்டு வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் குணப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com