டீ, சிகரெட் கடன் தராததால் கடை ஊழியரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர்

டீ, சிகரெட் கடன் தராததால் கடை ஊழியரை உருட்டுக்கட்டையால் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டீ, சிகரெட் கடன் தராததால் கடை ஊழியரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர்
Published on

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை பெருமாள் கோவில் அருகே உள்ள டீ கடையில் சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் கடனுக்கு டீ, சிகரெட் தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு சந்திரன் தர மறுத்துவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை கடைக்கு உருட்டுகட்டையுடன் வந்த வாலிபர், ஊழியர் சந்திரனை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து பீர்க்கன்கரணை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த அஜீத் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடை ஊழியரை வாலிபர் தாக்கும் காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com