வாலிபர், சிகிச்சை பலனின்றி சாவு

திட்டச்சேரி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாலிபர், சிகிச்சை பலனின்றி சாவு
Published on

திட்டச்சேரி:

திட்டச்சேரியை அடுத்த கோதண்டராஜபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் பாபு கணேஷ் (வயது 28). அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் (30). நண்பர்களான இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று திட்டச்சேரியில் இருந்து திருமலைராஜன் பட்டினத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாபு கணேஷ் ஓட்டி சென்றார். இந்திரா நகர் அருகே சென்றபோது எதிரே ஆலங்குடிசேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாபு கணேஷ், மணிகண்டன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாபு கணேசை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பாபு கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com