கோவிலில் திருடிய வாலிபர் கைது

நாமக்கல் அருகே கோவிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவிலில் திருடிய வாலிபர் கைது
Published on

நாமக்கல் அருகே வள்ளிபுரம் பேயர் தெருவில் காமாட்சி அம்மன் கேவில் உள்ளது. இக்கேவிலில் கடந்த 18-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், சாமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை திருடி சென்றார்.

இது குறித்து கேவில் தர்மகர்த்தா செல்வம், நல்லிபாளையம் பேலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் அதேபகுதியை சேர்ந்த சிவா (வயது 26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சாமி கழுத்தில் இருந்த நகையை திருடி அடமானம் வைத்ததை ஒப்பு கெண்டார். அவரை கைது செய்த பேலீசார் தெடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com