கழிவறைக்கு சென்ற மாணவிகளை வீடியோ எடுத்த வாலிபருக்கு தர்ம அடி

கழிவறைக்கு சென்ற மாணவிகளை வீடியோ எடுத்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
கழிவறைக்கு சென்ற மாணவிகளை வீடியோ எடுத்த வாலிபருக்கு தர்ம அடி
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் சிலர் அங்குள்ள கழிவறைக்கு சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் மாணவிகளை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட மாணவிகள் கூச்சலிட்டு உள்ளனர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவிகளிடம் நடந்த விவரத்தை கேட்டு அறிந்தனர். பின்னர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவரது செல்போனை உடைத்தனர். பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தி ஓட்டல் தொழிலாளியான மணிகண்டன் (வயது 23) என்பவரை வலைவீசி தேடி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com