பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து விட்டது; மு.க. ஸ்டாலின் பேட்டி

பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து விட்டது என மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து விட்டது; மு.க. ஸ்டாலின் பேட்டி
Published on

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தகவல்கள் தெரிவித்தன. அவரை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று சந்தித்து உடல்நலம் குறித்து நேற்று கேட்டறிந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு மீண்டும் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அன்பழகன் உடல்நலம் பற்றி கேட்டறிந்துள்ளார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்து விட்டது. அவர் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க வேண்டி உள்ளது. அதனால் தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க வரவேண்டாம் என கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com