தவெக அரசின் சாதனை: 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியது தான் - ரகுபதி குற்றச்சாட்டு

எங்களைவிட பல மடங்கு கடன் வாங்கப் போகிறவர்கள்தான் இந்த ஆட்சி தான் என ரகுபதி கூறியுள்ளார்.
 தவெக அரசின் சாதனை
ரகுபதி குற்றச்சாட்டு
Published on

நாமக்கல்,

விஜய் ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியதுதான் தவெக ஆட்சியின் சாதனை என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுக்கேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ-வுமான ரகுபதி பேசியதாவது,

விஜய் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஒடும்

தவெகவினர் ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்கு வந்தனர். அவர்களின் எந்தச் சாதனையையும் சொல்லி, அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. இவர் (விஜய்) ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. இதில் ஒரு பைசாகூட மூலதனச் செலவுக்கு செலவிடப்படவில்லை.

பட மடங்கு கடன்

நாங்கள் (திமுக) கடன் மட்டுமே வைத்துவிட்டு சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், எங்களைவிட பல மடங்கு கடன் வாங்கப் போகிறவர்கள்தான் இந்த ஆட்சி.

ஒரு திட்டத்தை அறிவிப்பர்; ஆனால், எந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள். ரூ. 1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் சட்டசபை அலுவலகம் என்றார்கள். அப்படியெனில், ஒரு சதுர அடிக்கு ரூ. 6,000 வருகிறது. ஆனால், எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது குறித்து கூற மாட்டார்கள்.

நாங்கள் செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரத்தை உருவாக்கினோம். அதற்கான அடிப்படைச் செலவுகளைச் செய்துவிட்டோம். ஆனால், அதனை ரத்து செய்து விட்டார்கள்.

ரீல்ஸ் ஆட்சி

ராணிப்பேட்டையில் ஜேகே டயர் தொழிற்சாலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ சொல்கிறார். அந்த தொழிற்சாலையை மூட முடியாது என அமைச்சர் கீர்த்தனா பதிலளிக்கிறார்.

ஆனால், அந்த இடத்தில் தொழிற்சாலையே இல்லை. இல்லாத தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும், பாதுகாப்போம் என்றும் சொல்கின்றனர். அவர்கள் ரீல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இது ரியல் ஆட்சி கிடையாது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டை ஆட்கள் வைத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டை சுத்தம் செய்து கொடுத்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com