கோர்ட்டு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

திண்டுக்கல் அருகே கோர்ட்டு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருடு போனது.
கோர்ட்டு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
Published on

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி லட்சுமிநகரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 61). இவர், மதுரை மாவட்ட கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி தண்டபாணி, தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டையில் உள்ள உறவினரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டார். இதனால் அவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகையை திருடி சென்றனர்.

இதற்கிடையே தண்டபாணி நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, நகைகள் திருடுபோனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com