பூ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

கொடைரோடு அருகே பூ வியாபாரி வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பூ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
Published on

கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). பூ வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் முதல் மாடியில் தூங்கி கொண்டு இருந்தார். அதிகாலை 4 மணிக்கு வீட்டின் மாடியில் இருந்து பிரபாகரன் கீழே இறங்கி வந்தார்.

அப்போது கீழ் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூ.70 ஆயிரம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com