

திண்டிவனம்,
திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை அடுத்த ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 49) விவசாயி. இவர் நேற்று முன்தினம் வெள்ளி மேடுபேட்டையில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை தனது ஸ்கூட்டர் பெட்டியில் வைத்து கொண்டு திண்டிவனத்தில் உள்ள ஒரு வங்கியில் தனது மினிலாரிக்கான தவணை தொகையை கட்ட சென்றார். ஆனால் நேரம் முடிந்துவிட்டதால் வங்கியில் பணத்தை செலுத்த முடியவில்லை. இதையடுத்து மயிலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு கடைக்கு சென்றார்.
வலைவீச்சு
பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. அந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது. தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.