ஆரல்வாய்மொழி அருகே தனியார் காற்றாலையில் ரூ.2½ லட்சம் பொருட்கள் திருட்டு

ஆரல்வாய்மொழி அருகே தனியார் காற்றாலையில் ரூ.2½ லட்சம் பொருட்கள் திருட்டு போனது.
ஆரல்வாய்மொழி அருகே தனியார் காற்றாலையில் ரூ.2½ லட்சம் பொருட்கள் திருட்டு
Published on

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி குமாரபுரம் செல்லும் சாலை அருகே தனியார் காற்றாலை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக 2 காற்றாலைகள் இயங்கி வந்தன. சம்பவத்தன்று இரவு காற்றாலைகள் இயங்குவதை ஊழியர் பார்த்து விட்டு வந்தார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது ஒரு காற்றாலை ஓடாமல் இருப்பதை ஊழியர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது காற்றாலையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சி.டி.டிஸ்பிளே, கண்ட்ரோல்போர்டு, சுவிட்சு டிஸ்பிளே உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி காற்றாலை மேலாளர் ராபர்ட் ஜாண் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com