ரூ.1½ லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற வனவர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.
ரூ.1½ லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
Published on

பேரணாம்பட்டு டவுன் பூந்தோட்ட வீதியில் வசித்து வருபவர் விமலா (73) இவரது கணவர் ஸ்ரீதரன் ஒய்வு பெற்ற வனவர். கணவர் ஸ்ரீதரன் இறந்து விட்டதால் விமலா வீட்டை பூட்டி விட்டு அதே தெருவில் உள்ள தனது மகள் ஆனந்த லட்சுமி வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஆனந்த லட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் நகை, பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு பேயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஆனந்த லட்சுமி நேற்று புகார் கொடுத்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com