திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
திருடியவர் கைது
Published on

அம்பை:

கல்லிடைக்குறிச்சி புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிகிருஷ்ணன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் அவருடைய வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்பு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த அய்யப்பன் (39) என்பவர் ஆதிகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அய்யப்பனை நேற்று கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com