5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

களக்காடு அருகே நடந்த கொலை தொடர்பாக 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் கடந்த மே மாதம் 22-ந் தேதி முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிங்கிகுளம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (43), ஐகோர்ட்டு ராஜா (31), கீழ தேவநல்லூர் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி (28), இசக்கிமுத்து (22), தென்கரையைச் சேர்ந்த சொக்கலிங்கம் (24) ஆகிய 5 பேரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவர்கள் 5 பேரையும் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com