வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேரன்மாதேவி அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

நெல்லை:

சேரன்மகாதேவி மூலக்கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் செல்வகுமார் (வயது 21) என்பவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சுகாதேவி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செல்வகுமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com