

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து முக்கூடல் வழியாக சுத்தமல்லிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த கார் ஹரிராம் நகர் அருகே வந்த போது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், முக்கூடலில் உள்ள கோரங்குளத்திற்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.