சுற்றுலா பயணி மயங்கி விழுந்து சாவு

திற்பரப்பு அருவியில் குளித்த போது சுற்றுலா பயணி மயங்கி விழுந்து சாவு
சுற்றுலா பயணி மயங்கி விழுந்து சாவு
Published on

குலசேகரம், 

மதுரை தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் திற்பரப்பு அருவியில் குளிக்க நேற்று பிற்பகல் வந்தனர். அவர்களுடன் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த முகமது பாட்ஷா (வயது 65) என்ற சமையல்காரரும் வந்திருந்தார்.

மாலையில் அனைவரும் ஆர்வமாக குளித்தனர். அந்த சமயத்தில் முகமது பாட்ஷா அருவியின் அருகே உள்ள சிமெண்ட் தளம் பகுதியில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.இதனை கவனித்த போலீசார் முகமது பாட்ஷாவை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் முகமது பாட்ஷா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவலறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் முகமது பாட்ஷாவின் உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். திற்பரப்பு அருவிக்கு குளிக்க வந்த இடத்தில் சுற்றுலா பயணி திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com